ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜிற்கு குழந்தை பிறந்தது... பிரபலம் பகிர்ந்த போட்டோ
மாதம்பட்டி ரங்கராஜ்
மெஹந்தி சர்கஸ் போன்ற படத்தின் மூலம் நாயகனாக களமிறங்கி கலக்கியவர் மாதம்பட்டி ரங்கராஜ்.
அந்த படம் சரியான ரீச் கொடுக்கவில்லை என்றாலும் அவருக்கு அவரது சொந்த தொழில் கைகொடுத்தது. சமையல் தொழிலில் களமிறங்கிய இவர் சில காலங்களிலேயே மிகவும் பிரபலம் ஆனார்.

எந்த அளவிற்கு பிரபலம் ஆனாரோ அதேபோல் இப்போது பெரிய அளவில் பிரச்சனையிலும் சிக்கியுள்ளார். இவர் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகளை பெற்றார்.
ஆனால் அவர் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவரை மறுமணம் செய்ய அவர் கர்ப்பமாகவும் இருந்தார்.
குழந்தை
மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து குழந்தை கொடுத்துவிட்டு ஏமாற்றிவிட்டார் என ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்தார்.

அந்த பிரச்சனைகள் இப்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கு இடையில் ஜாய் கிரிசில்டா, எனது மருத்துவ செலவு, வீட்டு பராமரிப்பு போன்ற செலவுகளுக்கு ரங்கராஜ் மாதம் ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் தர உத்தரவிட வேண்டும் என மனு அளித்தார்.
இந்த நிலையில் ஜாய் கிரிசில்டாவிற்கு இன்று அக்டோபர் 31 காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.‘ திருமணத்தின் போது மாதம்பட்டி ரங்கராஜுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இந்த செய்தியை அறிவித்துள்ளார் ஜாய் கிரிசில்டா.