பழம்பெரும் பிரபல காமெடி நடிகர் சந்திரபாபுவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- இப்படியொரு வாழ்க்கையா அவருக்கு?
சந்திர பாபு
பழம்பெரும் நடிகர்களில் சிலரது முகம், பெயர்கள் இப்போது உள்ள மக்களுக்கு தெரியும். காரணம் அவர்கள் அப்போதே சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி பெரிய அளவில் பிரபலம் ஆனார்கன்.
அப்படி கதாநாயகன், காமெடி நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என தனக்கென தனி முத்திரை பதித்தவர் இவர். 1947ஆம் ஆண்டு 'அமராவதி' என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி, மிக விரைவிலேயே முன்னணி காமெடி நடிகர் என்கிற அடையாளத்தை பெற்றார்.
திரை வாழ்க்கை இவரை சந்தோஷத்தின் உச்சத்தில் கொண்டு சென்றாலும் குடும்ப வாழ்க்கை அப்படி அமையவில்லை.
குடும்பம்
1958ம் ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளர் சுவாமிகண்ணு வின்சென்ட்டின், பேத்தியும், ஆங்கிலோ இந்தியருமான ஷீலாவை ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய மனைவி ஷீலா வேறொருவரை காதலித்ததாக கூறியதும், அவரது ஆசையை நிறைவேற்ற, அவரது காதலனுடனே சேர்த்து வைத்திருக்கிறார்.
அதன்பின் எந்த திருமணமும் செய்யாமல் தனியாக வாழ்ந்து இறந்துள்ளார்.
வாரிசு ட்ரெய்லர் வரட்டும் எல்லாம் மிரண்டு ஓட போறாங்க: நடிகர் ஷாம் Exclusive Interview