நடிகை ஜான்வி மார்பிங் வீடியோ.. கடும் எச்சரிக்கை விடுத்த நடிகர் ஜூனியர் என்டிஆர்

By Parthiban A Oct 03, 2026 04:20 PM GMT
Report

ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி ஆகியோர் நடித்த படம் தேவரா. அந்த படத்தில் வரும் சுட்டமல்லி என்ற பாடல் பெரிய அளவில் ஹிட்டான ஒன்று. அதில் ஜான்வி மிகவும் கவர்ச்சியாக தோன்றி இருப்பார்.

அந்தப் பாடல் காட்சிகளை சிலர் ஏஐ மூலமாக மார்பிங் செய்து மிக தவறான விதத்தில் இணையத்தில் உலவ விட்டிருக்கின்றனர். அந்த வீடியோவை பார்த்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கடும் கோபமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

நடிகை ஜான்வி மார்பிங் வீடியோ.. கடும் எச்சரிக்கை விடுத்த நடிகர் ஜூனியர் என்டிஆர் | Jr Ntr Angry X Post On Chuttamalle Morphed Video

யாரையும் விடமாட்டேன்

பெண்களை அம்மாவாகவும், கடவுளாகவும் வணங்கும் பூமி இது. இது நம்முடைய கலாச்சாரம். ஆனால் சிலர் மிகவும் மோசமாக லெவலுக்கு இறங்கி பெண்களை இழிவுபடுத்த ஏஐ பயன்படுத்தி இருக்கின்றனர்.

இது வார்த்தையில் விவரிக்க முடியாத மோசமான செயலாகும். இந்த மார்பிங் சுட்டமல்லி வீடியோவுக்கு பின்னால் இருக்கும் நபர்களுக்கு.. உங்கள் யாரை விட மாட்டேன்.

அந்த வீடியோவை உருவாக்கியவர்கள் மற்றும் பரப்பியவர்கள் மீது அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் நான் எடுப்பேன். இப்படிப்பட்ட CONTENT-ஐ பார்த்து பகிராதீர்கள்.

இன்று யாரோ.. நாளை உங்களுடைய அம்மா, அக்கா, மனைவி அல்லது மகளாக இருக்கலாம். இது மிகவும் சீரியசான விஷயம். மாநில அரசு மற்றும் மத்திய அரசு AI தவறாக பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டம் போட வேண்டும்" என ஜூனியர் என்டிஆர் பதிவிட்டு இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US