J.S.K: திரை விமர்சனம்
சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியாகியுள்ள "ஜானகி வி v/s ஸ்டேட் ஆப் கேரளா" மலையாள திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
பெங்களூருவில் வேலை பார்க்கும் ஜானகி (அனுபமா பரமேஸ்வரன்) சொந்த ஊரான கேரளாவிற்கு வருகிறார்.
அப்போது பாதிரியாருக்கு எதிரான கேஸ்ஸில் ஆஜராக வரும் டேவிட்க்கு (சுரேஷ் கோபி) எதிராக ஆர்ப்பாட்டம் நடக்க, அதில் ஜானகியின் அப்பா கீழ தள்ளிவிடப்படுகிறார்.
இதனால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழக்கிறார். இந்த செய்தியை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வரும்போது டிவியில் பார்க்கும் அனுபமா மயங்கிவிழுகிறார்.
அவரை மருத்துவர் பரிசோதிக்கும்போது இரண்டு நாட்களுக்கு முன் ஜானகி பாலியல் வன்புணர்வுக்கு ஆளானது தெரிய வருகிறது.
இந்த கேஸை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் இருவரை குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் நிறுத்துகிறார்
ஆனால், அவர்களுக்கு ஆதரவாக வாதாடும் டேவிட், ஜானகி சொல்வது பொய் என்றும், அவர் ரேப் செய்யப்படவில்லை என்றும் சாட்சியங்களுடன் நிரூபிக்க கேஸ் தள்ளுபடி ஆகிறது.
அதன் பின்னர் ஜானகி உண்மையிலேயே ரேப் செய்யப்பட்டரா? அப்படியானால் குற்றவாளி யார் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
பிரித்விராஜ் நடிப்பில் சக்கைபோடு போட்ட 'ஜன கன மன' படத்தின் சாயலில் இப்படமும் நிறைய ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸை கொண்டுள்ளது.
சீனியர் லாயராக சுரேஷ் கோபி அலட்டல் இல்லாத நடிப்பை தந்திருக்கிறார். அவர் வாதாடும் காட்சிகளில் பேசும் வசனங்கள் கூஸ்பம்ப் மொமெண்ட்ஸ்தான்.
குறிப்பாக அவர் கோர்ட்டில் அனுபமாவிடம் "நீங்க ஆபாச படங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டும் இடம் ஷாக்கிங் மொமெண்ட்.
அனுபமா படம் முழுக்க எதார்த்த நடிப்பில் அசத்தியிருக்கிறார். நீதி கிடைக்காத கையறு நிலையில் இருக்கும் பெண்ணை கண்முன் நிறுத்துகிறார்.
முதல் பாதியிலேயே கேஸ் டிஸ்மிஸ் ஆனாலும், எந்த மொமெண்ட்டில் அது மீண்டும் தொடங்கும் என நம்மை ஆவலுடன் காத்திருக்க வைக்கும் திரைக்கதையில் ஜெயிக்கிறார் இயக்குநர்.
குற்றவாளி யார் என்னும் சஸ்பென்ஸை யூகிக்க முடியாத வகையில் கடைசி வரை தக்கவைத்திருக்கிறார் இயக்குநார் பிரவின் நாராயணன்.
அஸ்கர் அலி, திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
பல கோர்ட் டிராமா படங்களுடன் ஒப்பிடுகையில், கிளைமேக்சில் ஒரு செக்ஷனை கூறி அதற்கான தீர்ப்பை கொடுத்ததில் தனித்து நிற்கிறது இப்படம்.
பெண்ணுக்கான நியாயம் மட்டுமில்லாமல், கலாச்சாரத்தை தள்ளி வைத்து அவளுக்கான உரிமையையும் பெற வேண்டும் என்பதை ஆணித்தனமாக கூறுகிறது இந்த J.S.K.
கிளாப்ஸ்
கதைக்களம்
திரைக்கதை
நடிப்பு
பின்னணி இசை
பல்ப்ஸ்
சில இடங்கள் மையக்கதையில் இருந்து வெளியே செல்வதை தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் நியாயத்தையும், பெண்ணுரிமையும் நிலைநாட்டியிருக்கிறாள் இந்த ஜானகி. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங்: 3.25/5

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
