ரூ.4600 கோடி சொத்து வைத்திருக்கும் நடிகை.. இப்போது படங்களிலேயே நடிப்பதில்லையா?
சினிமா துறையில் ஹீரோக்களுக்கு நிகராக நடிகைகளுக்கு எப்போதும் சம்பளம் தரப்படுவதில்லை என குற்றச்சாட்டு இருந்து வருகிறது. பல நடிகைகள் அந்த குற்றச்சாட்டை வெளிப்படையாகவும் பேசி இருக்கிறார்கள்.
மேலும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் அவர்கள் நடித்தாலும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வசூலிக்குமா என்பதும் கேள்விகுறி தான்.
இப்படி நடிகைளுக்கு இருக்கும் சிக்கல்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு பிரபல நடிகை தான் சம்பாதித்த தொகை மூலமாக தற்போது நான்காயிரத்து அறுநூறு கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார் என்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜூஹி சாவ்லா
1984இல் மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்த ஜூஹி சாவ்லா அதன் பிறகு 1986இல் நடிகையாக அறிமுகம் ஆனார். அப்போது அவருக்கு வயது 19 தான். பல டாப் ஹீரோக்கள் உடன் நடித்து பல ஹிட் படங்கள் கொடுத்த அவர் 90களில் முக்கிய நடிகை ஆக வலம் வந்தார்.
4600 கோடி சொத்து
ஜூஹி சாவ்லா சமீப காலமாக எந்த படங்களிலும் நடிப்பது இல்லை என்றாலும் அவருக்கு 4600 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என Hurun Rich Listல் வெளியாகி இருக்கும் தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளர்களில் அவரும் ஒருவர். சொந்தமாக அவர் பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும் பல நிறுவனங்களிலும் அவர் முதலீடு செய்திருக்கிறார். குறிப்பாக ஒரு சிமெண்ட் நிறுவனத்தில் அவருக்கு பங்கு இருக்கிறதாம்.
ஐபிஎல், நிறுவனங்கள், பங்குகள், பட தயாரிப்பு போன்றவற்றின் மூலம் அவர் ஒரு பக்கம் சம்பாதித்தாலும் மற்றொரு பக்கம் அவர் விளம்பரங்களில் நடித்து தான் சமீபகாலமாக சம்பாதிக்கிறார். பல முன்னணி பிராண்டு விளம்பரங்களை நாம் பார்க்க முடியும்.