விஜய்யுடன் நிறைய முறை பேசியுள்ளேன், அவர் எனக்கு அப்படிதான்- ஜுனியர் என்.டி.ஆர் ஓபன் டாக்
தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது RRR திரைப்படம். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கியுள்ள இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடித்துள்ளார்கள்.
இதில் முக்கிய நாயகியாக பாலிவுட் சினிமாவின் டாப் நாயகி ஆல்யா பட்டும் நடித்துள்ளார்.
படத்தின் டிரைலர், பாடல்கள் எல்லாம் வெளியாகிவிட்ட நிலையில் படம் மட்டும் இன்னும் ரிலீஸாக உள்ளது. பட புரொமோஷனுக்காக ராஜமௌலி, ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண் என பேரும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள்.
அண்மையில் டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளனர். அதில் ஜுனியர் என்.டி.ஆர் பேசும்போது, விஜய்யுடன் நான் நிறைய முறை பேசியுள்ளேன். பெரிய நடிகர் என்ற தலைகனம் எல்லாம் இல்லாமல் சாதாரண மனிதராக இருப்பார்.
மாஸ்டர் படத்திற்கு பிறகு கூட அவரிடம் பேசி இருந்தேன், நல்ல நண்பர், என்னை விட சினிமா துறையில் சீனியர் அவர், எனக்கு அவரது நடனம் மிகவும் பிடிக்கும் என கூறியிருக்கிறார்.
❤️ THALAPATHY ❤️
— Vijay Television (@vijaytelevision) December 31, 2021
RRR Special - நாளை மதியம் 2:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #RRRSpecial #Vijay #NewYearSpecial #NewYear2022 pic.twitter.com/fu0NJMmvE9