உலகளவில் 10 நாட்களில் ஜுராசிக் வேர்ல்ட் ரீபிர்த் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
ஜுராசிக் வேர்ல்ட் ரீபிர்த்
உலகளவில் அனைவரையும் கவர்ந்த Franchise-ல் ஒன்று ஜுராசிக் பார்க். அதனுடன் புதிய பாகம்தான் ஜுராசிக் வேர்ல்ட் ரீபிர்த் . பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்தை இயக்குநர் கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்சன், மஹெர்ஷாலா அலி மற்றும் ஜொனாதன் பைலி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 4ம் தேதி திரையரங்கில் வெளிவந்த ஜுராசிக் வேர்ல்ட் ரீபிர்த் திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பு கிடைத்திருந்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
10 நாட்கள் வசூல்
ஆம், முதல் நாளில் இருந்தே உலகளவில் மிகப்பெரிய வசூலை செய்து வருகிறது. இந்த நிலையில், இப்படம் 10 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜுராசிக் வேர்ல்ட் ரீபிர்த் உலகளவில் 10 நாட்களில் ரூ. 4540 கோடி வசூல் செய்துள்ளது. அதே போல் இந்தியாவில் மட்டுமே ரூ. 80 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இதன்மூலம் உலக சினிமா பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது ஜுராசிக் வேர்ல்ட் ரீபிர்த். இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் என்னென்ன புதிய சாதனைகளை செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
