மூன்று நாட்களில் Jurassic World Rebirth செய்த சாதனை.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடி வசூலா
Jurassic World Rebirth
உலக புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர் Scarlett Johansson. The Avengers, Lucy, The Prestige ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம்தான் Jurassic World Rebirth.
இயக்குநர் Gareth Edwards இயக்கத்தில் உருவான இப்படத்தில் Mahershala Ali, Jonathan Bailey, Luna Blaise ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பு கிடைத்திருந்தாலும், வசூல் ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
வசூல் வேட்டை
பாக்ஸ் ஆபிசில் இப்படம் முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டையாடி வரும் நிலையில், மூன்று நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, Jurassic World Rebirth திரைப்படம் மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 2700 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது.
மேலும் இந்தியவில் மட்டுமே ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் Jurassic World Rebirth படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் இறுதி வசூல் எவ்வளவு வரப்போகிறது என்று.

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
