தாய்ப்பாலை தானம் செய்த விஷ்ணு விஷால் மனைவி ஜுவாலா கட்டா... எவ்வளவு லிட்டர் தெரியுமா?
விஷ்ணு விஷால்
தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.
இவர் கடந்த 2021ம் ஆண்டு இவர் ஜுவாலா கட்டா என்பவரை மறுமணம் செய்தார். திருமணம் ஆகி 4 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஏப்ரல் 2025, 22ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு பாலிவுட் நடிகர் அமீர்கான் தான் மிரா என பெயர் வைத்தார்.
தானம்
ஜுவாலா கட்டா தனது தாய்ப்பாலை தானம் அளிக்க முன்வந்துள்ளார். அதாவது அரசு மருத்துவமனையில் தினமும் 600 மில்லி தாய்பாலை அவர் தானம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தாய் இன்றி ஆதரவில்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு ஒரு தாயாக உதவும் வகையில் ஜூவாலா கட்டா இந்த முன்னெடுத்துள்ளதார். இதுவரை அவர் அவர் சுமார் 30 லிட்டர் தாய்ப்பாலை தானம் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூவாலா கட்டா தனது குழந்தைக்கு தினம் தாய்ப்பால் கொடுத்த பின்னரே, அரசு மருத்துவமனைக்கு தானம் அளிக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது.