மும்பையில் குடும்பத்துடன் ஜாலியாக ஹோலி கொண்டாடிய ஜோதிகா.. கலக்கல் போட்டோஸ்
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு கொண்டாட்டம் பற்றிய போட்டோஸ் தான் அதிகம் வலம் வருகிறது.
வேறு என்ன ஹோலி தான், வண்ணங்கள் மற்றவர்கள் மீது வண்ணங்கள் தூவி கொண்டாடப்படும் இந்த பண்டிகையை கோலாகலமாக நடந்து முடிந்துவிட்டது. சில தமிழ் சினிமா பிரபலங்களும் ஹோலியை கொண்டாடியுள்ளார்கள்.
ஜோதிகா
அப்படி சில வருடங்களுக்கு முன் மும்பை சென்ற ஜோதிகா ஹோலியை தனது குடும்பத்தினருடன் இணைந்து கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
ஜோதிகா ஹோலி புகைப்படங்கள் வெளியிடவில்லை ஆனால் அவரது சகோதரி நக்மா தனது இன்ஸ்டாவில் ஜோதிகா மற்றும் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடிகை ஜோதிகா நடிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டப்பா கார்ட்டல் என்ற சீரிஸ் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவர் சூர்யாவின் நடிப்பில் வெளியான கங்குவா பட தோல்வி குறித்தும், தென்னிந்திய சினிமா குறித்து பேசியதும் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியது.