கோட் சூட்டில் அசத்தும் நடிகை ஜோதிகா.. எப்படி இருக்கிறார் என்று பாருங்க

Kathick
in பிரபலங்கள்Report this article
நடிகை ஜோதிகா
திரையுலகில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இன்று வரை மார்க்கெட் போகாமல் நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. திருமணத்திற்கு பின் 6 ஆண்டுகள் பிள்ளைகளை கவனித்து கொண்ட ஜோதிகா, பின் மீண்டும் நடிக்க துவங்கினார்.
36 வயதினிலே படத்திலிருந்து சோலோ ஹீரோயினாக நடிக்க துவங்கி, காற்று மொழி, ராட்சசி போன்ற பல நல்ல திரைப்படங்களை கொடுத்து வந்தார். மேலும் தற்போது பாலிவுட் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வரும் ஜோதிகா, அடுத்ததாக சைத்தான் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் மாதவன், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. சைத்தான் மட்டுமின்றி இன்னும் சில இந்தி திரைப்படங்களிலும் ஜோதிகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோட் சூட்டில் ஜோதிகா
இந்நிலையில், சைத்தான் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கோட் சூட்டில் வந்த அசத்தினார் நடிகை ஜோதிகா. அப்போது எடுக்கப்பட்ட ஜோதிகாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கலக்கி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
