சூர்யாவை விட மூன்று மடங்கு அதிகம் சம்பாதித்த ஜோதிகா.. எந்த படம் தெரியுமா?
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் கோலிவுட்டில் நட்சித்திர ஜோடியாக வலம் வருகின்றனர். சூர்யா தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.
ஜோதிகாவும் தற்போது ஹிந்தியில் பட வாய்ப்புகள் தேடி வருகிறார். அதற்காக சூர்யாவும் குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
ஜோதிகா
தற்போது கங்குவா படத்தின் ப்ரோமோஷனுக்காக பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருகிறார் சூர்யா. அதில் ஜோதிகா உடன் மும்பைக்கு குடிபோனது ஏன் என்கிற காரணத்தையும் தெரிவித்து உள்ளார். 27 வருடங்கள் சென்னையில் தன்னுடன் இருந்த ஜோதிகா அடுத்து அவரது பெற்றோர் உடன் இருக்க வேண்டும் என விரும்பினார், அதற்காக தான் இது என கூறி இருக்கிறார்.
மேலும் ஆரம்பகட்டத்தில் ஜோதிகாவை சந்தித்தது, காதலில் விழுந்தது பற்றி பேசிய அவர், "ஜோதிகா ஹிந்தியியல் ஒரு படம் நடித்துவிட்டு அடுத்து தமிழில் எனக்கு ஜோடியாக நடித்தார். எனக்கு அது நான்காவது அல்லது ஐந்தாவது படம் என நினைக்கிறேன்."
"நான் ஒரு நடிகரின் மகன் என்றாலும் நடிக்க அவ்வளவு தடுமாறுவேன், வசனங்களை மறந்துவிடுவேன். ஆனால் ஜோதிகா அனைத்திலும் சரியாக இருப்பார். அவ்வளவு சின்சியர்."
மூன்று மடங்கு சம்பளம்
"நான் ஹீரோ என என்னை சொல்லிக்கொள்ளவே பல வருடங்கள் ஆனது. ஆனால் ஜோதிகா தான் நடித்த படங்களில் என்னை விட அதிகம் சம்பாதித்தார்."
"காக்க காக்க படத்தில் ஜோதிகாவின் சம்பளம் என்னை விட மூன்று மடங்கு அதிகம்" என சூர்யா கூறி இருக்கிறார்.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
