தனது மனைவியை விவாகரத்து செய்த ஜோதிகா பட இயக்குனர்- பிரபலமே போட்ட பதிவு
பொன்மகள் வந்தாள்
நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் பொன்மகள் வந்தாள்.
சூர்யாவின் 2டி எண்டர்மெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோர் நடிக்க நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது. இந்த படத்தை ஜேஜே ஃபிரடரிக் என்பவர் தான் இயக்கி இருந்தார்.
தற்போது இவரது சொந்த விஷயம் குறித்த தகவல் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
பிரபலத்தின் டுவிட்
படங்களில் Costume designer மற்றும் பிரபலங்களின் உடை அலங்காரம் செய்பவருமான ஜாய் கிரிசில்டா என்பவரை ஃபிரடரிக் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக ஜாய் கிரிசில்டா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
Divorce is not a FAILURE it’s a courageous decision ? pic.twitter.com/ec9bStSdOI
— Joy Crizildaa (@joy_stylist) December 15, 2023