பெண் கதாபாத்திரங்களை கொண்ட படங்களுக்கு பட்ஜெட் கிடைப்பதில்லை.. நடிகை ஜோதிகா ஓபன் டாக்
ஜோதிகா
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. திருமணமனதிற்கு பின் 8 ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி இருந்த நடிகை ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

இதை தொடர்ந்து காற்றின் மொழி, ராட்சசி, உடன்பிறப்பே, பொன்மகள் வந்தால் போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இந்த நிலையில், பெண்கள் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு உருவாகும் கதைகள் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஓபன் டாக்
அவர் கூறியதாவது, "நான் சினிமாவை விட்டு விலகி இருந்த 8 ஆண்டுகளில் பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்ட படங்கள் அதிகம் வரவில்லை. அதற்குப்பின் நான் '36 வயதினிலே' படத்திலும் நடிகை நயன்தாரா 'மாயா' படத்திலும் நடித்தோம். இரண்டு திரைப்படங்களும் நன்றாக ஓடின. 36 வயதினிலே படத்தின் பட்ஜெட் வெறும் ரூ. 5 கோடி மட்டுமே. நாங்கள் அந்த படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் போது ஒரு அக்கினி பரிதிசையாக இருந்தது. ஏனென்றால் வேறு யாருக்கும் பட்ஜெட் இருக்காது" என கூறினார்.

பெண் கதாபாத்திரங்களை கொண்ட திரைப்படங்களுக்கு பட்ஜெட் கிடைப்பதில்லை என நடிகை ஜோதிகா பேசியுள்ளது தற்போது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.