நக்மா இல்லாமல் ஜோதிகாவின் இன்னொரு அக்காவை பார்த்துள்ளீர்களா! அவரும் நடிகை தானா
ஜோதிகா
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர் சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். பின் சோலோ ஹீரோயின் களமிறங்கினார்.
தொடர்ந்து கதையின் நாயகியாக நடித்து வரும் ஜோதிகா சமீபகாலமாக பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக சைத்தான் எனும் இந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஜோதிகாவின் அக்கா பிரபல நடிகை நக்மா என்பதை நாம் அறிவோம். ஆனால், ஜோதிகாவிற்கு மற்றொரு அக்கா இருக்கிறார் என்பதும் அவர் ஒரு நடிகை என்பதும் பலருக்கும் தெரியாது.
ஜோதிகாவின் அக்கா ரோஷினி
அவர் வேறு யாருமில்லை நடிகை ரோஷினி தான். ஆம், தமிழில் 1997ஆம் ஆண்டு வெளிவந்த சிஷ்யா எனும் திரைப்படத்தில் ரோஷினி நடிகையாக அறிமுகமாகியுள்ளார். அதன்பின் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் கூட நடித்துள்ளார்.
கடைசியாக அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த துள்ளி திரிந்த காலம் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன்பின் அவர் சினிமா பக்கம் வரவில்லை. இந்த நிலையில், நடிகை ஜோதிகா, நக்மா மற்றும் ரோஷினி மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..


உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
