வீட்ல சண்டை போட்டு தான் மும்பைக்கு சென்றேனா.. சர்ச்சைக்கு ஜோதிகாவே சொன்ன பதில்
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதி தற்போது மும்பையில் குடும்பத்துடன் செட்டில் ஆகி இருக்கின்றனர். அவர்களது மகன் மற்றும் மகள் இருவரையும் மும்பையில் இருக்கும் பள்ளியிலேயே சேர்த்து படிக்க வைத்து வருகின்றனர்.
ஜோதிகாவும் ஹிந்தியில் பட வாய்ப்புகள் பெற்று நடித்து வருகிறார். சூர்யா மட்டும் சென்னை - மும்பை என விமானத்தில் அடிக்கடி வந்துசென்றுகொண்டிருக்கிறார்.
சண்டை போட்டு தான் போனேனா?
மாமனார் சிவக்குமார் மற்றும் மாமியார் உடன் சண்டை போட்டுவிட்டு தான் ஜோதிகா மும்பைக்கு சென்றுவிட்டார் என ஒரு விஷயம் பேசப்படுவது பற்றி ஜோதிகாவிடமே ஒரு பேட்டியில் கேட்கப்பட்டு இருக்கிறது.
அதற்கு அவர் வேறு விதமாக பதில் அளித்து இருக்கிறார். "கொரோனா காலகட்டத்தில் என்னுடைய பெற்றோருக்கு பல முறை பாதிப்பு ஏற்பட்டது, அவர்களை பார்க்க என்னால் மும்பைக்கு செல்ல முடியவில்லை."
"அதனால் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே சென்று அவர்களுடன் சில காலம் இருக்கலாம் என முடிவு செய்தேன். அதனால் தான் மும்பைக்கு வந்து செட்டில் ஆனேன்" என ஜோதிகா கூறி இருக்கிறார்.

சிங்கிள் பசங்க: தமிழின் பெருமை பற்றி அதிரும் தொணியில் பேசிய ராவணன்! வியப்பில் ஆழ்ந்த அரங்கம் Manithan

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
