"கங்குவா படத்தில் சில பகுதிகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம்".. ஆனால்? நடிகை ஜோதிகா இப்படி கூறினாரா
கங்குவா
கடந்த ஆண்டு வெளிவந்து கடுமையான விமர்சனத்தை சந்தித்த திரைப்படம் கங்குவா. சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருந்தது.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த கங்குவா, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடிவாங்கியது. இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா கங்குவா படத்திற்கு வந்த விமர்சனங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஜோதிகா பேச்சு
அவர் கூறியதாவது "பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வெற்றியடைந்த பல தரம் குறைந்த திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவை அனைத்தும் கரிசனத்துடன் விமர்சனம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் எனது கணவரின் படம் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாக உணர்கிறேன். இது எனக்கு அநீதியாக தெரிகிறது" என கூறினார்.
மேலும் பேசிய அவர் "அந்த திரைப்படத்தில் சில பகுதிகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், மொத்தமாக படத்திற்கு பெரும் சிரத்தையுடன் உழைத்திருக்கிறார்கள். எனினும், சில மோசமான படங்களைவிட கடுமையான விமர்சனங்களை அந்த படம் சந்தித்ததை பார்த்தபோது, அது என்னை பாதித்தது. ஊடகங்கள் பாரபட்சமாக நடந்துகொள்வது வருத்தமாக இருக்கிறது" என கங்குவா படத்திற்கு வந்த

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
