உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தில் கே.பாலசந்தர் மருமகள்- யார் அவர் தெரியுமா?
மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் என பலர் நடிக்க கடந்த வியாழக்கிழமை (ஜுன் 29) வெளியான திரைப்படம் மாமன்னன்.
சாதி பற்றிய கதையாக இல்லாமல் நிஜ கதையை மையமாக கொண்டு உருவாகி வெளியாகி இருக்கும் இப்படம் இரண்டு நாள் முடிவில் ரூ. 17 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.
மாமன்னன் வடிவேலுவிற்காகவே எடுக்கப்பட்ட படம் போல் அவரது கதாபாத்திரத்தை செதுக்கியிருக்கிறார். வடிவேலுவும் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது குணச்சித்திர நடிப்பை அருமையாக வெளிப்படுத்தி இருப்பார்.

பாலசந்தர் மருமகள்
இந்த படத்தில் வடிவேலுக்கு மனைவியாக வீராயி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் கே.பாலசந்தர் மருமகள் கீதா கைலாசம்.
இவர் ஏற்கெனவே சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதிக்கு மனைவியாக சில காட்சிகளில் நடித்தார். அதேபோல் வீட்ல விசேஷம் திரைப்படத்தில் நர்ஸ் கேரக்டரில் நடித்திருந்தார்.

2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை காயத்ரி- கணவருடன் சேர்ந்து அவர் வெளியிட்ட கியூட் போட்டோ