என்னது இவ்வளவு லட்சமா!! கே.எஸ். ரவிக்குமார் சம்பளத்தை கேட்டு ஷாக்கான பாலச்சந்தர்..
கே.எஸ். ரவிக்குமார்
தமிழ் சினிமாவின் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள இயக்குநர்களில் ஒருவர் கே.எஸ். ரவிக்குமார். இவர் இயக்கத்தில் வெளிவந்த நாட்டாமை, முத்து, படையப்பா, தசாவதாரம், வரலாறு போன்ற பல படங்கள் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் மக்களை கவர்ந்துள்ளார். இந்த நிலையில், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அளித்த பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
ஷாக்கான பாலச்சந்தர்
”முத்து படத்திற்கு பாலச்சந்தர் சார்தான் தயாரிப்பாளர், நீங்க அவர் கிட்ட போய் கதை சொல்லுங்க என்று ரஜினி சார் சொன்னார். அப்போ ரஜினி சார் என்னுடைய சம்பளம் எவ்வளவு என்று கேட்டார். 12 லட்சம் ரூபாய் என நான் கூறினேன்.
பின், ரஜினி சார் இந்த படத்திற்கு என்னுடைய சம்பளம் 15 லட்சம் ரூபாய் என எழுதி அனுப்பினார் போல. அதை பார்த்துவிட்டு பாலச்சந்தர் சார், என்ன உனக்கு 15 லட்சமா சம்பளம் என்று ஷாக் ஆகிட்டார். நானெல்லாம் 15 லட்சம் பார்த்ததே இல்லை. 5 லட்சம் ரூபாய்க்கு மேல நான் சம்பளமே வாங்கியது இல்லடா என்று பாலச்சந்தர் சார் சொன்னார்" என அந்த பேட்டியில் கே.எஸ். ரவிக்குமார் பேசியுள்ளார்.