படம் ஓடல, ஆனால் விஜய் இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா? மேடையில் விளாசிய பிரபலம்
பீஸ்ட் படம் எதிர்பார்புகளை பூர்த்தி செய்யவில்லை என்ற ஒரே விமர்சனம் தான் அனைத்து பக்கங்களில் இருந்தும் வந்து கொண்டிருக்கிறது. நெல்சன் இயக்கிய இந்த படம் அவரது முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மோசமாக இருக்கிறது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது டாப் ஹீரோக்களை விளாசி இருக்கிறார். ஆனால் அவர் எந்த ஹீரோவின் பெயரையும் குறிப்பிட்டு கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"300 கோடிக்கு செலவு செய்து எடுத்த படம் 30 கோடி தான் வசூல் செய்கிறது, அது பெரிய படமா. ஆனால் ஹீரோ மட்டும் சம்பளத்தை 110 கோடி என உயர்த்துகிறார். 65 கோடி வாங்கிய ஹீரோ இப்போது 100 கோடிக்கு மேல் இருந்தால் வாங்க, இல்லையென்றால் வேண்டாம் என தயாரிப்பாளர்களை துரத்துகிறார்" என கே ராஜன் கூறி இருக்கிறார்.
விஜய் எந்த ஹீரோ பெயரையும் கூறவில்லை என்றாலும், அவர் அஜித், விஜய்யை பற்றி தான் கூறி இருக்கிறார் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.