தயாரிப்பாளரை காலால் எட்டி உதைத்த இயக்குனர் அட்லீ.. விலாசிய பிரபலம், சிரித்த நடிகர் சிவா
பிகில்
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிகில். இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்திருந்தது.

கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படம் வசூல் ரீதியாக ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றாலும் கூட தயாரிப்பாளருக்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லை என்று திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில், தயாரிப்பாளர் கே. ராஜன் பிகில் திரைப்படம் குறித்து சமீபத்தில் மேடை ஒன்றில் பேசியுள்ளார்.
விலசிய பிரபலம்
இதில் ' ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த சக்தே இந்தியா திரைப்படத்தின் காப்பி தான் பிகில். அதில் ஹாக்கி இதில் கால்பந்து. தயாரிப்பாளரை கால்களால் எட்டி உதைத்துவிட்டார் இயக்குனர் அட்லீ. சம்பளம் மட்டும் ரூ. 30 - 40 கோடி வாங்குகிறார்.

ஆனால், தயாரிப்பாளருக்கு லாபம் கிடைப்பதில்லை ' என தயாரிப்பாளர் ராஜன் பேசும் பொழுது, மேடையில் அமர்ந்திருந்த நடிகர் சிவா சிரித்துக்கொண்டிருந்தார். கே. ராஜனின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

பல கோடி லாபம் கொடுத்த ஹீரோவுக்கு ஜோடியாகும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.. சூப்பர் ஜோடி