பிரபல இயக்குனர் மகனை ஹீரோ ஆக்கும் கே.எஸ்.ரவிக்குமார்! யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். தற்போது அவர் கூகுள் குட்டப்பா என்ற படத்தை தயாரித்து நடித்து இருக்கிறார். பிக் பாஸ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா அதில் ஜோடியாக நடித்து இருக்கின்றனர்.
20 வருடங்களுக்கு பின் தயாரித்த படம்
இந்த படத்திற்காக 20 வருடங்களுக்கு பிறகு தான் பட தயாரிப்பில் இறங்கியதாக நேற்று நடந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார்.
தனது அசிஸ்டென்ட் ஆக இருந்த இருவர் கேட்டதால் தான், அவர்களுக்கு உதவும் விதத்தில், இந்த படத்தை தயாரிக்கவும் செய்ததாக கூறி இருக்கிறார் அவர்.
விக்ரமன் மகன் ஹீரோவாக அறிமுகம்
இதனை தொடர்ந்து தான் அடுத்து தயாரிக்க உள்ள படத்தில் இயக்குனர் விக்ரமன் மகன் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ளதாக கே.எஸ் ரவிக்குமார் தெரிவித்து உள்ளார்.
அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.


சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
