இரண்டாவது திருமணத்திற்கு தயாரானாரா பிக்பாஸ் புகழ் காஜல் பசுபதி- அவர் போட்ட டுவிட் பார்த்தீர்களா?
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை காஜல் பசுபதி. இவர் நடன இயக்குனர் சாண்டியை திருமணம் செய்திருந்தார்.
சில வருடங்களுக்கு பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இப்போது சாண்டி டோரதி என்பவரை மறுமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாகி உள்ளார். காஜல் பசுபதி விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.
எப்போதும் டுவிட்டர் பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் காஜல் பசுபதி, 8 மாதமாக Dmல் பேசிட்டு இருந்தோம், நேற்று சொல்லிட்டேன், இன்று அக்சப்ட் செய்துவிட்டான், டுவிட்டர் லவ் என பதிவு செய்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் 37 வயதில் காஜல் பசுபதி மறுமணத்திற்கு தயாராகிவிட்டாரா யார் அவர் என கமெண்ட் செய்கின்றனர். சிலர் அவர் பிராங்க் ஏதாவது செய்கிறாரா என்றும் கூறி வருகின்றனர்.
8மாசமா Dm ல பேசிட்டு இருந்தோம் நேத்து சொல்லிட்டேன் இன்னைக்கு
— Kaajal Pasupathi (@kaajalActress) November 30, 2021
Accept பண்ணிட்டான்🥰#TwitterLove ❤️