காந்தா படத்திற்கு வந்த புது சிக்கல்.. ரிலீஸ் ஆகுமா?
துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் காந்தா. துல்கர் தயாரிப்பில் இந்த வருடம் ரிலீஸ் ஆன லோகா படம் பெரிய ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது. அடுத்து அவர் நடிப்பில் வர இருக்கும் காந்தா மீது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பை வைத்து இருக்கின்றனர்.
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார் எம்.கே.தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று படம் தான் இது.

பிரச்சனை
இந்நிலையில் இந்த படத்திற்காக எம்.கே.தியாகராய பாகவதரின் வாரிசுகளிடம் அனுமதி வாங்கவில்லை எனவும், அதனால் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் அவரது மகள் வழி பேரன் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
இது பற்றி துல்கர் சல்மான் மற்றும் தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவித்து இருக்கிறது. படம் ரிலீசுக்கு இன்னும் 3 தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது இந்த பிரச்சனை படக்குழுவுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan