முதல் நாள் காந்தா உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
காந்தா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் துல்கர் சல்மான். எப்போதும் தரமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் நம்பிக்கையை சம்பாதித்து இருக்கும் இவர் நடிப்பில் நேற்று வெளிவந்த படம் காந்தா.

இப்படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியிருந்தார். துல்கர் உடன் இணைந்து சமுத்திரக்கனி, ராணா டகுபதி, பாக்கியஸ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.
முதல் நாள் வசூல்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிலர் கலவையான விமர்சனங்களையும் கூறியுள்ளனர். இந்த நிலையில், முதல் நாள் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, முதல் நாள் உலகளவில் காந்தா படம் ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri