காந்தா திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் சினிமா குறித்து பல படங்கள் வெளிவந்துள்ளது, அப்படி ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து துல்கர், சமுத்திரகனி, பாக்யஸ்ரீபோஸ், ராணா போன்ற நடிகர்கள் பட்டாளத்துடன் களம் இறங்கியுள்ள இயக்குனர் செல்வா ஜெயித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்
துல்கர் சல்மான் தமிழகமே கொண்டாடும் ஒரு நாயகன், அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்தது இயக்குனர் சமுத்திரக்கனி. ஆனால், தன் சிஷ்யன் புகழ் தன்னை விட உயர்ந்ததை கண்டு சமுத்திரகனி கொஞ்சம் பொறாமை படுகிறார்.
அந்த நேரத்தில் சமுத்திரகனி இயக்கத்தில் துல்கர் நடிக்க, அந்த படத்தில் துல்கர் இறப்பது போல் காட்சி இருக்க, இது வேண்டாம் என துல்கர் சொல்ல இருவருக்கும் ஈகோ முட்டி படம் நிற்கிறது.

பிறகு அந்த ஸ்டுடியோ இழுத்து மூடும் நிலைக்கு வர அதற்காக இருவரும் அந்த படத்தை தொடர சம்மதம் தெரிவிக்க, துல்கரை போலவே பாக்யஸ்ரீ போஸை சமுத்திரகனி உருவாக்குகிறார்.
ஆனால், அவரும்
மீது காதலில் விழ இதை தொடர்ந்து எல்லோர் வாழ்வும் திருப்பிம் போடும் பல சம்பவங்கள் அரங்கேற, பாக்யஸ்ரீ கொலை செய்யப்பட, இந்த கொலையை யார் செய்தார்கள் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
துல்கர் சல்மான் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே கண்டிப்பாக அது எல்லோரின் கவனம் ஈர்க்கும் படமாக தான் இருக்கும், அந்த வகையில் காந்தா தன் நடிப்பிற்கு தீனி இல்லை, அறுசுவை படையல் விருந்து கிடைத்தால் சும்மா இருப்பாரா, மனுஷன் விளையாண்டுள்ளார்.
அதுவும் ஒரு காட்சியில் கண்ணாடி முன்பு அழுக முடியாமல் சிரிக்கும் காட்சி எல்லாம் அவார்ட் எடுத்து வைங்க என்று சொல்லும்படி உள்ளது. சமுத்திரகனி அய்யாவாக வாழ்ந்துள்ளார், அதிலும் துல்கர் சல்மான் வளர்ச்சி கண்டு அவர் அடையும் ஈகோ அதன் பிறகு அவர் செய்யும் வேலைகள் என அவரும் சிக்ஸர் அடித்துள்ளார்.

கூடுதலாக பாக்யஸ்ரீ தமிழ் சினிமாவிற்கு இல்லை இந்திய சினிமாவிற்கே நல்ல வரவேற்பு, கண்களிலேயே அத்தனை நடிப்பையும் அள்ளி தெளித்துள்ளார். படத்தின் முதல் பாதி முழுவதும் சாந்தா படம் காந்தாவாக மாறி எப்படி போகிறது என்பதே காட்சிகளாக வருகிறது, படம் மெதுவாக நகர்ந்தாலும் சுவாரஸ்யம் குறைவில்லை.
இடைவேளை குமாரி கொலை, ராணா விசாரணைக்கு வருவது என படம் சூடு பிடித்தாலும், அந்த விசாரணை காட்சிகளில் பெரிய விறுவிறுப்பு கொஞ்சம் குறைவாக இருக்க இரண்டாம் பாதி சுவாரய்ஸம் குறைகிறது. கிளைமேக்ஸ் துல்கர், சமுத்திரகனி என எல்லோரும் தங்கள் தவறை உணர்ந்து நிற்கும் இடம் எமோஷ்னல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

படத்தின் மிகப்பெரும் பலம் செட் ஒர்க், ஒளிப்பதிவு, இசை போன்ற டெக்னிக்கல் ஒர்க் தான், தி பெஸ்ட் சொல்லும் படி மிகவும் மெனக்கெட்டுள்ளது காட்சிகளில் தெரிகிறது. கட் சொன்ன பிறகு நடிக்காதே, நீ சொல்ற ஆடியன்ஸ் 50 வருஷம் கழிச்சு இருக்க மாட்டான், ஆனா படம் இருக்கும் போன்ற மெட்டபர் வசனங்கள் ரசிக்க வைக்கிறது.
க்ளாப்ஸ்
நடிகர், நடிகைகள் பங்களிப்பு, அதிலும் துல்கரை குறிப்பிட்டு சொல்லலாம்.
படத்தின் டெக்னிக்கல் ஒர்க்.
முதல் பாதி.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி சுவாரஸ்யமான களம் இருந்தும் காட்சிகள் இல்லாதது.
மொத்தத்தில் காந்தா கமர்ஷியல் தாண்டி ஒரு கலைப்படைப்பாக கொண்டாடலாம்.
