திடீரென காத்து வாக்குல ரெண்டு காதல் பட காட்சிகள் ரத்து- நாளை ரிலீஸ் ஆகாதா, ரசிகர்கள் ஷாக்
விக்னேஷ் சிவன் தமிழ் சினிமா கவனிக்கக் கூடிய ஒரு பிரபலம். இவர் இயக்கத்தில் நாளை காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாக இருக்கிறது.
இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என 3 பிரபலமான நடிகர்கள் ஒரே இடத்தில் நடித்துள்ளனர், படத்தின் டீஸர், டிரைலர், பாடல்கள் எல்லாம் ஏற்கெனவே செம ஹிட்.

ரத்து செய்யப்பட்ட ஷோ
நாளை ஏப்ரல் 28 படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் USA ப்ரீமியர் காட்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளதாம்.
சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் நாளைய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது, உங்களது பணத்தை நாங்கள் திருப்ப கொடுத்திடுவோம் என திரையரங்கில் சாப்பில் கூறப்படுகிறது.
திடீரென ஷோக்கள் ரத்து என கேள்விப்பட்ட ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் இதுபோன்ற பிரச்சனை வந்துவிடுமா என்ற பயத்திலும் பட ரசிகர்கள் உள்ளார்கள்.

வெளிநாட்டில் நேற்று பீஸ்ட் மற்றும் Kgf 2 படம் எவ்வளவு வசூல் தெரியுமா?