விருதே கொடுக்காமல் அசிங்கப்படுத்திய விஜய் டிவி! ஆனாலும் காற்றுக்கென்ன வேலி தொடர் செய்த சாதனை
விஜய் டிவியின் சீரியல் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களை கௌரவிக்கும் விதமாக வருடம்தோறும் விருது விழாவினை நடத்தி வருகின்றனர்.
விருது விழா
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த விருது விழாவில் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல தொடர்களை சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
நடிகர்கள் விருது உடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட நிலையில் அவர்களுக்கு விஜய் டிவி ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.
காற்றுக்கென்ன வேலி சாதனை
இந்த விருது விழாவில் காற்றுக்கென்ன வேலி தொடருக்கு எந்த விருதும் வழங்கப்படவில்லை. அதை அந்த தொடரில் நடிக்கும் ஒரு நடிகையே பதிவிட்டு இருந்தார். ரசிகர்களும் அந்த கருத்தை தான் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது காற்றுக்கென்ன வேலி டிஆர்பியில் சாதனை செய்திருக்கிறது. மற்ற தொடர்களை பின்னுக்கு தள்ளி மதிய நேர சீரியல்கள் டிஆர்பியில் முதலிடம் பிடித்து இருக்கிறது.
ஒரு மணி ஸ்லாட்டில் தற்போது காற்றுக்கென்ன வேலி தொடர் தான் முதலிடம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.