காட்டேரி திரைவிமர்சனம்
யாமிருக்கே பயமே படத்திற்கு பிறகு இயக்குனர் டிகே இயக்கத்தில் உருவான திகில் திரைப்படம் காட்டேரி. ஞானவேல் ராஜா தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள இப்படம் பல ஆண்டுகளுக்கு பின் இன்று வெளிவந்துள்ளது. டிகேவின் நகைச்சுவை கலந்த திகில் மூட்டும் இயக்கத்தின் மேல் ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். அத்தகைய ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் டிகேவின் காட்டேரி திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க பார்க்கலாம்..
கதைக்களம்
நைனா எனும் டானிடம் தன்னையும் தனது நண்பர்களையும் சிக்கவிட்டு, தங்க புதையலை தேடி செல்லும் தங்களுடைய கூட்டாளி ஒருவனை தேடி, நண்பர்கள் மற்றும் மனைவியுடன் செல்கிறார் கதாநாயகன் வைபவ். பயணத்தில் ஒரு கிராமத்தை அடையும் வைபவ், தனது கூட்டாளியின் புகைப்படத்தை காட்டி ஒரு வீட்டில் விசாரிக்கிறார்.
அங்கு தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் தேடி வந்த கிராமத்தில் அனைவருமே மரணமடைந்து பேய்யாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இதன்பின், எப்படியாவது இந்த கிராமத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்று என்னும் வைபவுக்கு அடுத்த அதிர்ச்சியும் காத்திருந்தது.
ஆம், இந்த கிராமத்தை விட்டு வெளியேற நினைத்தால், மீண்டும் அதே கிராமத்துக்கு வந்து அடைவதுபோல் அமானுஷம் அமைந்துள்ளது. இதிலிருந்து வைபவ் தனது நண்பர்கள் மற்றும் மனைவியுடன் தப்பித்தாரா? இல்லையா? இறுதியில் புதையல் கிடைத்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
நகைச்சுவை, பயம் என ஓரளவு சிறப்பாக நடித்துள்ளார் வைபவ். கதாநாயகிகளாக வரும் சோனம் பாஜ்வா மற்றும் ஆத்மீகா இருவரின் நடிப்பு பெரிதாக திரையில் தெரியவில்லை. காமெடியன்ஸ் கருணாகரன், ரவி மரியா, குட்டி கோபியின் நகைச்சுவைக்கு சிரிப்பு வரவில்லை. பேய்யாக வரும் வரலக்ஷ்மி சரத்குமாரின் நடிப்பு போர் அடிக்கிறது.
மற்றபடி ஜான் விஜய், மைம் கோபி, லல்லு சபா மனோகர், பொன்னம்பலம் என அனைவரின் கதாபாத்திரமும் சொல்லும் அளவிற்க்கு வலுவாக இல்லை. யாமிருக்கே பயமேன் எனும் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் டிகே, காட்டேரியில் சற்று சறுக்கலை சந்தித்துள்ளார். நகைச்சுவை, திகில் என இரண்டும் எடுபடவில்லை.
இதுவே திரைக்கதைக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ஏற்கனவே பல முறை பார்த்து சலித்துப்போன அதே கதைக்களம். இனிமேல் பேய்யே நேரில் வந்து, இப்படி படம் எடுக்காதீர்கள் என்று கூறினாலும் ஆசிரியப்படுவதற்கு இல்லை. எஸ்.என். பிரசாத்தின் ம்யூசிக் ஓகே. பிரவீன் கே.எல் எடிட்டிங் சொல்லும் அளவிற்கு இல்லை. பி.எஸ். வினோத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு ஓரளவு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது.
க்ளாப்ஸ்
ஒளிப்பதிவு
பல்ப்ஸ்
இயக்கம், திரைக்கதை
எடுபடாத நகைச்சுவை
சலித்துபோன கதைக்களம்
ஒர்கவுட் ஆகாத திகில் காட்சிகள்
மொத்தத்தில் மாபெரும் சொதப்பல் இந்த காட்டேரி

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி News Lankasri

கோடிகளை கொட்டி 19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்! 2 மாதத்தில் விவாகரத்து... வெளியான காரணம் News Lankasri

தினமும் வெந்நீர் குடித்து வந்தால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா? இதோ பாருங்க... IBC Tamilnadu
