கபாலி பட தயாரிப்பாளர் கே.பி சவுத்ரி தற்கொலை! சினிமா துறையினர் கடும் அதிர்ச்சி
தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் சங்கர கிருஷ்ணா பிரகாஷ் சவுத்ரி என்கிற கே.பி. சவுத்ரி. அவர் தெலுங்கு கபாலி உள்ளிட்ட சில படங்களை தயாரித்து இருப்பவர்.
சில வருடங்களுக்கு முன் அவர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்தார். 93 கிராம் போதைப்பொருள் அவர் வைத்திருந்ததாக கைதானார்.
தற்கொலை
44 வயதாகும் அவர் கோவாவில் அதன் பிறகு ஒரு தொழில் தொடங்கிய நிலையில் அதிலும் வெற்றி கிடைக்கவில்லை. அதனால் மனஉளைச்சலில் இருந்து இருக்கிறார்.
கடந்த பல மாதங்களாக கோவாவில் தனியாக தான் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் திங்கட்கிழமை அவர் தங்கி இருந்த வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது பற்றி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தயாரிப்பாளர் தற்கொலை சினிமா துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.