கப்ஜா திரைவிமர்சனம்
கன்னட திரையுலகில் கே ஜி எப், காந்தரா, 777 சார்லி என பல சூப்பர் ஹிட் படங்கள் இந்தியா முழுவதும் வசூல் வேட்டஒ ஆடி வந்தது. இதை பார்த்து கன்னட சினிமாவின் சூப்பர்ஸ்டார்கள் உபேந்திரா, சுதீப், சிவராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள கப்ஜா எப்படியுள்ளது, பார்ப்போம்.
கதைக்களம்
அமராபுரம் இரண்டு பெரும்புள்ளிகள் பிடிக்க கடுமையாக போராடி வருகின்றனர். இவர்கள் பிரச்சனையில் உபேந்திரா உள்ளே வருகிறார்.
இப்போது அமாராபுரம் உபேந்திரா கண்ட்ரோலுக்கு வர, பிறகு என்ன அவர் இடத்தை காலி செய்ய லோக்கல் டான் முதல் இண்டர்நேஷனல் டான் வரை களத்தில் இறங்க கடைசியில் என்ன ஆனது என்பதே கதை.
படத்தை பற்றிய அலசல்
புலியை பார்த்து பூனை சூடுப்போட்ட கதையாக கே ஜி எப்-யை பார்த்து சூடு போட்டால் பரவாயில்லை, பழுக்க காட்சி நமக்கு போட்டு விட்டார்கள் சூடு.
படத்தில் கே ஜி எப் இன்ஸ்பிரிஷன் இருக்கலாம், அதற்காக கேமரா, கதை, திரைக்கதை, இசை, எடிட்டிங் வரை பிள்ளையார் சுழி கூட காப்பியடித்து எடுத்தால் என்ன சொல்வது.
படத்தில் எப்போதும் பத்து பேர் 15 பேரை வெட்டிக்கொண்டும், சுட்டுக்கொண்டுமே தான் இருக்கிறார்கள், உபேந்திரா சாதுவாக இருந்து மாவீரனாக மாறுவது எல்லாம் சரி தான், ஆனால், அதற்காக ஏதோ வீடியோ கேம் டாஸ்க் போல் கலில், பகீரா என பெரிய பெரிய டான்களை எல்லாம் ஏதோ பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ படத்துக்கு செல்வது போல், அவர்கள் வீட்டிற்கு சென்று கொல்வதெல்லாம் முடியலப்பா..
படத்தின் இசை கே ஜி எப் இசையமைப்பாளருக்கு கே ஜி எப்-ல் போட்டது தான் இசை போல, துளி கூட இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை. அதிலும் இரைச்சல் மட்டுமே மிஞ்சுகிறது.
டெக்கனிக்கல் ஒர்க் ஒளிப்பதிவு ஒரே ஆறுதல்.
க்ளாப்ஸ்
- படத்தின் ஒளிப்பதிவு.
- சில வசனங்கள், ஒன் மேன் ஆர்மியாக கொஞ்சம் மெனக்கெட்டுள்ள உபேந்திரா.
பல்ப்ஸ்
- மற்ற அனைத்தும்.
மொத்தத்தில் இது கப்ஜா இல்லை, கே ஜி எப் பார்த்த இயக்குனர் பல கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ள கப்சா.
Rating: 2/5