விஜய் சேதுபதி கடைசி விவசாயி படத்தின் முதல் விமர்சனம், படம் எப்படியிருக்கு தெரியுமா?
கடந்த 2012-ம் ஆண்டு இயக்குனர் பா.ரஞ்சித் முதன் முறையாக இயக்கி வெளிவந்த படமான அட்டக்கத்தி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன்.
அட்டக்கத்தி படத்தை தொடர்ந்து சூது கவ்வும், பீட்சா, மெட்ராஸ்,இறுதி சுற்று,கபாலி, வடசென்னை, கர்ணன் போன்ற படங்களுக்கு இசை அமைத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தனது தனித்துவம் வாய்ந்த இசையால் தன் பக்கம் திரும்பி பார்க்க செய்தவர்.
தமிழ் திரையுலகின் இசைத்துறைக்கு கிடைத்த பொக்கிஷம் என்றே சந்தோஷ் நாராயணனை கூறலாம் அந்த அளவிற்கு தன் இசையால் புரட்சி செய்து வருகிறார் இவர்.
இவர் தான் தற்போது காக்கா முட்டை படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கி முடித்திருக்கும் கடைசி விவசாயி என்னும் படத்தை குறித்து பாராட்டி ட்வீட் செய்துள்ளர்.
அதில் தான் பார்த்த படங்களிலேயே சிறப்பான படமாக கடைசி விவசாயி படம் இருந்ததாகவும் இந்தப் படத்திற்கு இசையமைத்ததை பெருமையாக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தப் படம் குறித்து பேச அதிகமான விஷயங்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவரை தவிர்த்து நடிகர் பசுபதி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
#KadaisiVivasayi is one of the best movies I have ever watched. So honoured to compose alongside the legendary #RichardHarvey and work with dear @VijaySethuOffl and the master @dirmmanikandan. I have so so much to say about this masterpiece ?. pic.twitter.com/I6lLD6y0QL
— Santhosh Narayanan (@Music_Santhosh) November 19, 2021