சீரியல் நடிகரை திருமணம் செய்யும் 'காதலிக்க நேரமில்லை' சந்திரா லக்ஷ்மன், யார் தெரியுமா?
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற தொடரின் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமான சின்னத்திரை நடிகை தான் சந்திரா லக்ஷ்மன்.
இவர் அந்த தொடரை தொடர்ந்து மகள், சொந்தபந்தம் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்திருந்தார். பின் 2015 முதல் நடிப்பதை தவிர்த்து வந்த சந்திரா லக்ஷ்மன், கடந்த ஆண்டு முதல் மீண்டும் மலையாள சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மலையாளத்தில் இவர் நாயகியாக நடிக்கும் 'ஸ்வந்தம் சுஜாதா' என்கிற தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று இன்னும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடித்துவரும் சக நடிகரான டோஷ் க்றிஸ்டி என்பவரை சந்திரா திருமணம் செய்யவுள்ளார்.
மேலும் இது குறித்து சந்திரா லக்ஷ்மன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.
