காதல் தேசம் பட புகழ் நடிகர் வினீத்தை நியாபகம் இருக்கா... இப்போது எப்படி உள்ளார் பாருங்க
நடிகர் வினீத்
நடிகர் வினீத் என்று நினைத்ததுமே நம் மனதில் முதலில் வருவது காதல் தேசம் படம், அதன்பின் சந்திரமுகி படம்.
இந்த இரண்டு படங்களும் வினீத்தை ரசிகர்களிடம் அதிகம் சேர்த்தது என்றே கூறலாம். பரதநாட்டிய கலைஞரான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

அதேபோல் டப்பிங் கலைஞராகவும் தன்னை நிரூபித்துள்ளார்.
கடந்த 1985ம் ஆண்டு வெளியான இடநிலங்கள் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் 1992ம் ஆண்டு பரதன் இயக்கிய ஆவாரம் பூ படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

அதன்பின் ஜாதி மல்லி, புதிய முகம், ஜென்டில்மேன், மே மாதம் என தொடர்ந்து நடித்தார். இடையில் கிடைக்கும் தரமான படங்களில் நடித்துவரும் வினீத் கடைசியாக காதல் என்பது பொதுவுடைமை படத்தில் நடித்திருந்தார்.
லேட்டஸ்ட்
மலையாளத்திலும் தொடர்ந்து படங்கள் நடிக்கும் வினீத் கடைசியாக மம்மும்டியுடன் இணைந்து டாமினிக் தி லேடீஸ் பர்ஸ் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் வினீத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது.

காதல் தேசம் படத்தில் பார்த்தவரா அப்படியே ஆளே மாறிவிட்டார் என கமெண்ட் செய்கிறார்கள்.
