சீரியல் நடிகர் அருண் பிரசாத் நடிக்கும் புதிய தொடர்... வெளிவந்த புரொமோ
விஜய் டிவி
விஜய் தொலைக்காட்சியில் இரண்டு சீரியல்கள் முடிவுக்கு வரப்போகிறது. மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட மகாநதி சீரியல் விரைவில் முடிகிறது, இறுதிக்கட்ட படப்பிடிப்பு எல்லாம் சில நாட்களுக்கு முன்பே முடிந்துவிட்டது.
கடைசிநாள் படப்பிடிப்பில் அதில் நடித்த நடிகர்கள் அனைவருமே அழுதுவிட்டார்கள், அதைப்பார்த்து ரசிகர்களும் மிகவும் எமோஷ்னல் ஆகிவிட்டார்கள்.
இந்த தொடரை தொடர்ந்து சமீபத்தில் புதியதாக தொடங்கப்பட்ட கனா கண்டேனடி சீரியலும் முடிகிறது, இவ்விஷயம் சீரியல் நடிகர்களுக்கே ஷாக்கிங் தகவலாக அமைந்தது.

காதல் காதல் காதல்
கடந்த சில வாரங்களுக்கு முன் காதல் காதல் காதல் என்ற தலைப்பில் ஒரு புரொமோ வெளியானது. 3 விதமான காதல் கதைகள் ஒளிபரப்பாக உள்ளதாம், மிர்ச்சி செந்தில் மூன்றுமே எப்படிபட்ட காதல் கதை என விவரிக்க இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கேட்கிறார்.

அப்படி இதுவரை 2 காதல் கதையின் புரொமோ வெளியானது, தற்போது 3வது காதல் கதையின் புரொமோ வெளியாகியுள்ளது.
அதில் அருண் பிரசாத் நாயகனாக நடிக்கிறார், வீட்டிற்கு பயந்த பெண்கள் மீது அதிக மதிப்பு கொண்ட ஒரு வார்த்தியாரின் காதல் கதையாம். இதோ புரொமோ,