எல்லோரும் அதைதான் பார்க்கிறார்கள், மன வருத்தத்தில் வீட்டில் முடங்கிய பிரபலம்- பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்
பிரபல நடிகை
தமிழில் 2004ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான படம் காதல், இதில் நாயகி சந்தியாவின் தோழியாக நடித்தவர் தான் சரண்யா நாக்.
பின் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு என நடித்தாலும் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை, 2009ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் 5 பெண்களில் ஒருவராக சரண்யா நடித்திருந்தார்.
அப்படம் அவருக்கு நல்ல ரீச் கொடுத்தாலும் அடுத்தடுத்து படங்கள் எதுவும் சரியாக அமையவில்லை.
கடைசியாக மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் லாபம் படத்தில் பணியாற்றியிருந்தார்.
நடிகையின் வருத்தம்
சரண்யா நாக் அண்மையில் ஒரு பேட்டியில், தைராய்டு பிரச்சனை இருந்ததால் எடை அதிகரித்தது, இதனால் எனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமானது. வெளியில் எதுவும் சொல்லிவிடுவார்களோ, தப்பு தப்பா பேசிடுவார்களோ என்று எதுவும் பண்ணவில்லை.
எல்லோரும் உடல் பருமனாக இருப்பதை மட்டுமே பார்க்கிறார்கள்.
இதனால் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் நான் எதுவுமே செய்யவில்லை, சேமிப்புகளை வைத்து என்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்தேன்.
இந்த இடைவெளிக்கு காரணம் என்னுடைய மனப்பான்மை தான், நம்மைச் சார்த்த ஊடகம், சினிமா, உடன் இருப்பவர்கள் என யாருமே சப்போர்ட் செய்யவில்லை என மன வருத்தத்துடன் பேசியுள்ளார்.