காதல் ரீசெட் ரிப்பீட் திரைவிமர்சனம்

By Tony Mar 06, 2026 08:50 AM GMT
Report

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள படம் காதல் ரீசெட் ரிப்பீட். இப்படத்தில் மதும்கேஷ், ஜியா ஷங்கர், அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர். காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்துள்ள இப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க. 

காதல் ரீசெட் ரிப்பீட் திரைவிமர்சனம் | Kadhal Reset Repeat Movie Review

கதைக்களம்

ஸ்காட்லாந்தில் ஹீரோயின் ஜியா படத்தின் முதல் காட்சியிலேயே காதல் தோல்வியால் மலையிலிருந்து விழுகிறார். இவரை கப்பாற்றி நாயகன் மதும்கேஷ் அவரிடம் தான் உன் காதலன் என சொல்கிறார்.

ஏனெனில் ஜியாக்கு அந்த விபத்தில் கடந்த 2 வருடம் நடந்தது எல்லாம் மறந்து போகிறது. அதோடு ஒரு நாள் நடப்பது தூங்கி எந்திரித்தால் முந்தைய நாள் நடந்தது எல்லாமே மறக்கிறது.

காதல் ரீசெட் ரிப்பீட் திரைவிமர்சனம் | Kadhal Reset Repeat Movie Review

எம் எஸ் பாஸ்கர் இவர்களை தங்கள் வீட்டிலேயே தங்க வைக்க, பிறகு தான் அவருக்கே தெரிகிறது, ஹீரோயின் ஜியா காதலன் மதும்கேஷ் இல்லை. அவர் சிறு வயதிலிருந்து ஜியாவை ஒன் சைட் ஆக காதலிக்க, அவருக்கு வாழ்க்கையில் நல்லது நடக்கவே இவர் வாழ்கிறார்.

முதல் காட்சியில் காதல் தோல்வியால் தான் ஜியா மலையிலிருந்து குதிக்கிறார், இதனால் மதும்கேஷ், ஜியா நல்லதுகாக நான் தான் உன் காதலன் என சொல்ல, பிறகு இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது, ஜியா காதல் ஜெயித்ததா? மதும்கேஷ் காதல் ஜெயித்ததா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

படம் ஆரம்பமே ஒரு காதல் தோல்வியில் ஆரம்பிக்கிறது. ஜியா படத்தின் நாயகியாக ஏ எல் விஜய் பட ஹீரோயினுக்கே உண்டான அளவான நடிப்பு, மௌனம், எமோஷ்னல் என அனைத்தையும் அழகாகவே செய்துள்ளார், சொல்ல போனால் இந்த படம் 2 ஹீரோக்கள் இருந்தாலும் ஹீரோயின் படமாகவே நகர்கிறது. ஆனால், மறதி இவ்வளவு பெரிய பிரச்சனை இருந்து அவர் பெரிய பதட்டம் இல்லாமல் 2 நிமிடம் கதை கேட்டு கன்வென்ஸ் ஆகி நாயகன் மதும்கேஷ்-டன் பயன்படுவது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.

மதும்கேஷ் அறிமுக படம் என்ற பதட்டம் தெரிகிறது, பேசலாமா, வேண்டாமா என்ற கதாபாத்திரம் தான் இவருக்கு படத்தில், ஆனால், நடிக்கலாமா? வேண்டாமா? என்ற பதட்டம் ஸ்க்ரீனில் தெரிய கூடாது அல்லவா, ஆனாலும், இவரையும் எப்படி பயன்படுத்தலாம் என இயக்குனர் விஜய் மதும்கேஷை பயன்படுத்திய விதம் அவரின் அனுபவத்தை காட்டுகிறது.

காதல் ரீசெட் ரிப்பீட் திரைவிமர்சனம் | Kadhal Reset Repeat Movie Review

அசோக் அர்ஜுனன் மலையாள சினிமாவில் கலக்கிய இவருக்கு தமிழ் அறிமுகம் கொஞ்சம் முதல் பாதியில் என்னடா இவரை வேஸ்ட் பண்ணிட்டாங்க என நினைக்கும் போது, இரண்டாம் பாதியில் மறதியில் இருக்கும் ஜியாவிடம் நான் தான் காதலன் என நிரூபிக்கும் இடம் செம கலகலப்பு, அதிலும் ஆங்கிலம் தெரியாத பவுன்ஸர்களுடன் சேர்ந்து அவர் செய்யும் கலாட்டா செம ஜாலி.

ஆனால், இந்த ஜாலி, ரொமான்ஸ், பீல் குட் படம் முழுவதுமே இருந்திக்கலாம் என்று தான் தோன்றியது, ஆம், அதிலும் படத்தின் முதல் பாதி மிகவும் பொறுமையை சோதிக்கிறது. மதும்கேஷ் தன்னை காதலிக்கவில்லை என்றாலும், தான் காதலித்த பெண் நன்றாக இருக்க வேண்டும் என அவர் செய்யும் காட்சிகளே முதல் பாதி முழுவதும் போக, அது சோர்வை தான் தருகிறது, பெரிய எமோஷன் இல்லை.

காதல் ரீசெட் ரிப்பீட் திரைவிமர்சனம் | Kadhal Reset Repeat Movie Review

ஆனால், அதுவே இரண்டாம் பாதி அர்ஜுன் அசோக் காமெடி காட்சிகள் கொஞ்சம் கவனம் ஈர்க்கிறது, எம் எஸ் பாஸ்கர் படம் முழுவதும் வருகிறார், வழக்கம் போல் அவர் பங்கை சிறப்பாக செய்துள்ளார். டெக்னிக்கலாக படம் மிக வலுவாகவே உள்ளது, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு கண்களுக்கு செம விருந்து, ஹாரிஸ் ஜெயராஜ் இசை நன்றாகவே இருந்தாலும் ஆல்ரெடி கேட்டது போலவே நிறைய டியுன் வந்து செல்கிறது.

க்ளாப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் காமெடி காட்சிகள்.

அர்ஜுன் அசோகன் , ஜியா , எம் எஸ் பாஸ்கர் நடிப்பு

டெக்னிக்கல் ஒர்க்

பல்ப்ஸ்

பெரியளவிற்கு கவராத எமோஷ்னல் காட்சிகள்.

திரைக்கதை

மொத்தத்தில் இந்த லவ் ரீஷார்ட் ரிப்பிட் நல்ல கான்செப்ட் ஆனால் திரைக்கதையில் கான்செப்ட்-ல் இருந்த சுவாரஸ்யம் இல்லை.

காதல் ரீசெட் ரிப்பீட் திரைவிமர்சனம் | Kadhal Reset Repeat Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US