தற்கொலை செய்துகொண்ட காதலர் தினம் பட புகழ் நடிகர் குணாலின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?
தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிப் பெற்ற படங்களில் மக்களால் இப்போதும் கொண்டாடப்படும் ஒரு படம் காதலர் தினம்.
இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தவர் குணால், மும்பையை சேர்ந்த இவர் முதலில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்திருக்கிறார். அதன்பிறகு ஹிந்தியில் தில் ஹை தில் மெய்ன் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
பின் தமிழில் காதலர் தினம், வருஷமெல்லாம் வசந்தம், புன்னகை தேசம், அற்புதம், திருடிய இதயத்தை என பல படங்கள் நடித்தார்.
இவர் மும்பையை சேர்ந்த அனுராதா என்பவரை திருமணம் செய்துகொண்டார், குழந்தைகளும் உள்ளார்கள். ஆனால் சில பிரச்சனைகளால் இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார்கள்.
திடீரென குணால் 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவரது மரணத்திற்கு குடும்ப பிரச்சனை தான் காரணம் என போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
இதோ குணால் தனது மனைவி குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம்,