வணங்கான், காதலிக்க நேரமில்லை படங்களின் வசூல் விவரம்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
வணங்கான் பட வசூல்
பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த திரைப்படங்கள் வணங்கான் மற்றும் காதலிக்க நேரமில்லை. இதில் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளிவந்தது.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படம் 11 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில் 11 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 9 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
காதலிக்க நேரமில்லை பட வசூல்
அதை தொடர்ந்து ஜனவரி 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம்தான் காதலிக்க நேரமில்லை. இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவான இப்படத்துக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.
7 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளது. இதுவே இந்த இரண்டு திரைப்படங்களின் தற்போதைய வசூல் விவரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.