காதலிக்க நேரமில்லை திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் ராம்காம் படங்கள் என்பதே வருவது இல்லை. வருஷத்திற்கு ஒன்று என வருவதே ஆச்சரியமாக இருக்க, தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனன், ரவி மோகன் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள காதலிக்க நேரமில்லை ரசிகர்கள் கொண்டாடும் ஒரு ராம்காம் ஆக வந்துள்ளதா? பார்ப்போம்.
கதைக்களம்
நித்யா மேனன் காதலித்து விரைவில் திருமணம் செய்ய ரெடியாக, அந்த நேரத்தில் அவருடைய காதலர் நித்யா மேனனை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணுடன் படுக்கையில் இருப்பதை அவரே பார்த்து விடுகிறார்.
அதனால் அந்த திருமணத்தை ப்ரேக் அப் செய்துவிட்டு, ஆண்கள் எதற்கு குழந்தை பெத்துக்க தானே என்று செயற்கை கருத்தரிப்பு மூலம் கர்ப்பம் ஆகிறார். அதே நேரத்தில் ஜெயம் ரவி பெங்களூரில் காதல் தோல்வியால் பல பெண்களிடம் இருந்து வாழ்க்கையை போக்கி வருகிறார்.
அவர் சில வருடங்களுக்கு முன்பு தன் நண்பன் வினய் சொன்னதற்காக தன்னுடைய ஸ்பேம்-யை சேர்த்து வைக்கிறார்.
பிறகு தான் தெரிகிறது நித்யா மேனன் குழந்தைகான ஸ்பேம் ஜெயம் ரவியுடையது என. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் இந்த உண்மை ஒருவருக்கொருவர் தெரியாமலே சந்திக்க, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
கிருத்திகா உதயநிதி படத்தை நித்யா மேனன் பாயிண்ட் ஆப்-ல் இருந்தே கொண்டு செல்கிறார். நித்யா மேனனும் நீங்க எந்த ரோல் வேண்டுமானாலும் கொடுங்க, நா சும்மா பட்டையை கிளப்புவேன் என்பது போல் அடித்து தூள் கிளப்பியுள்ளார்.
இந்த ட்ரெண்ட் அடுத்த ஜெனரேஷன் பெண்களுக்கான ஒரு கதாபாத்திரம், அத்தனை அழகாக செய்துள்ளார். படத்தில் பல இடங்களில் துறுதுறுவென இருந்தாலும், தன் மகன் அப்பா யார் என்று கேட்கும் இடம். மகன் வீட்டில் சொல்லாமல் வெளியே போக, அவரை தேடி அலையும் காட்சி என முழுக்க முழுக்க நித்யா மேனன் ராஜ்ஜியம் தான்.
ரவி எத்தனை நாட்கள் ஆகிவிட்டது இப்படி ஒரு ஜாலியான அதே நேரத்தில் யதார்த்தமான நடிப்பில் பார்த்து, இந்த படம் ஓடுது, ஓடவில்லை என்பதை தாண்டி ரவி-க்கு இது கண்டிப்பாக மிக முக்கியமான படம் தான்.
ஜெயம் ரவி நண்பர்களாக வரும் வினய் ஒரு தன் பால் ஈர்ப்பாளாராக தைரியமாக நடித்துள்ளார். அவரை யோகிபாபு கலாய்க்க, அவரும் அதை ஜெஸ்ட் லைக் தட் என்று கடப்பது சூப்பர். அதே நேரத்தில் இந்த படம் 2K kids தாண்டி அடுத்த ஜெனரேஷன் ஜென் ஆல்பாவிற்கான படம் என்றே சொல்லலாம், அத்தனை முற்போக்கான விஷயங்கள் படத்தில் நிறைந்துள்ளன.
ஆனால், இது அனைத்தும் ஒரே சில ஆடியன்ஸுக்கான படமாகவே கடந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை. கண்டிப்பா பி, சி செண்டர் ஆடியன்ஸுகளிடம் ரீச் இருக்குமா என்றால் கேள்விக்குறி தான்.
டெக்னிக்கலாக படம் மிக வலுவாகவே உள்ளது. குறிப்பாக படத்தின் ஒளிப்பதிவு அத்தனை கலர்புல், அதிலும் பெங்களூர் இரவை அத்தனை அழகாக காட்டியுள்ளனர். இசை ரஹ்மான் பற்றி சொல்லவே தேவையில்லை, கண்டிப்பாக தன் இசையால் இழு இழு என இழுத்து பிடித்துள்ளார்.
க்ளாப்ஸ்
நித்யா மேனன், ரவி
படத்தின் மிக முற்போக்கான காட்சிகள்.
அதை கையாண்ட விதம் ரவி, நித்யா அவர்களுடன் மகன் சம்மந்தப்பட்ட காட்சிகள்.
ஒளிப்பதிவு, இசை.
பல்ப்ஸ்
ஒரு குறிப்பிட்ட ஆடியன்ஸுக்கான படமாகவே காட்சிகள் நகர்கிறது.
திரைக்கதையில் இன்னமும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்.
மொத்தத்தில் காதலிக்க நேரமில்லை, ராம்காம் என்பதை தாண்டி எமோஷ்ன்ல் கூடிய ஜென் சி , ஜென் ஆல்பாவிற்கான படம்.