காதலிக்க நேரமில்லை சீரியல் நடிகையை உங்களுக்கு நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? இதோ புகைப்படம்
சந்திரா லக்ஷ்மன்
2003ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ஸ்வாதம் எனும் சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை சந்திரா லக்ஷ்மன். தொடர்ந்து மலையாள சீரியல்களில் நடித்து வந்த இவர், தமிழில் தேவயானி நடிப்பில் வெளிவந்த கோலங்கள் சீரியல் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
ஆனால், இவர் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானது காதலிக்க நேரமில்லை சீரியலில்தான். இந்த சீரியலில் நடிகர் பிரஜன் உடன் இணைந்து சந்திரா நடித்திருந்தார்.
இந்த சீரியலில் வரும் "என்னை தேடி காதல்" பாடல் கூட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. காதலிக்க நேரமில்லை சீரியலை தொடர்ந்து துளசி, வசந்தம், கயல் என தொடர்ந்து பல சீரியலில் நடித்து வந்தார். சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
இந்த நிலையில், 90ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த சின்னத்திரை நாயகியான சந்திரா லக்ஷ்மன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தனது கணவர் மற்றும் மகனுடன் நடிகை சந்திரா எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ, எப்படி இருக்கிறார் பாருங்க..

