செம ஹிட்டடித்த தளபதி விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தின் மொத்த வசூல் என்ன தெரியுமா?
காதலுக்கு மரியாதை
பாசிலின் இயக்கத்தில் விஜய் மற்றும் ஷாலினி ஜோடியாக நடிக்க 1997ம் ஆண்டு வெளியான திரைப்படம் காதலுக்கு மரியாதை.
இளையராஜா இசையமைப்பில் வெளியான இப்பட பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் தான்.
தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்று வரும் படங்கள் அனைத்தும் எளிதாக 200 கோடி தாண்டுகிறது.

இப்பட வசூல்
அப்படி விஜய் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படம் எவ்வளவு வசூலித்தது என்பது தெரியுமா.
இப்படம் அப்போதே உலகம் முழுவதும் ரூ. 20 கோடி வரை வசூல் செய்ததாம்.
விஜய்க்கு இப்படம் இரண்டாவது ப்ளாக்பஸ்டர் படமாக அமைந்தது, முதல் ப்ளாக் பஸ்டர் பூவே உனக்காக என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் தனது தாயுடன் எடுத்த அழகிய புகைப்படம்- அதிகம் வலம் வரும் ஒரேஒரு போட்டோ