விஜய் - ஷாலினி நடிப்பில் வெளிவந்த காதலுக்கு மரியாதை படத்தின் முழு வசூல், எவ்வளவு தெரியுமா
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
வாரிசு படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் தளபதி 67 படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதலுக்கு மரியாதை படத்தின் வசூல்
விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியடைந்த படங்களில் ஒன்று காதலுக்கு மரியாதை. பாசில் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை ஷாலினி கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் சிவகுமார், ஸ்ரீவித்யா, ராதாரவி என பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தார்கள். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிசில் ரூ. 15 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.