காதல் படத்தை நிராகரித்த தமிழ் சினிமாவின் டாப் நடிகர், யார் தெரியுமா?
இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடிகர் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காதல்.
இப்படம் வெளியாகி அனைவரிடமும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, தமிழ் சினிமா முழுவதும் பெரியளவில் பேசப்பட்டது.
மேலும் இப்படத்தின் இறுதியில் உள்ள நெகடிவ் கிளைமாக்ஸ் காரணமாக பலராலும், இப்படம் நிராகரிக்கப்பட்டதாக இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், இப்படத்தில் நடிக்க முதலில் நடிகர் தனுஷை அணுகப்பட்டதாம். ஆனால் அவர் சுள்ளான், ட்ரீம்ஸ் உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்காக இப்படத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இதில் கதாநாயகியாக நடிக்க முதலில் வரலக்ஷ்மி சரத்குமாரை தான் அணுகினார்களாம். அதனை சரத்குமார் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri