கதாநாயகி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்.. புதிய சீரியலின் ஹீரோயின்ஸ் இவர்கள் தானா
கதாநாயகி
விஜய் டிவியின் புதிய கதாநாயகியின் தேடலுக்கான துவங்கப்பட்ட நிகழ்ச்சி தான் கதாநாயகி. ராதிகா சரத்குமார் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் நடுவர்களாக பணிபுரிந்து விஜய் டிவியின் புதிய கதாநாயகிகான தேர்வை ஒவ்வொரு வாரமும் வைத்து வந்தனர்.
மேலும் குரேஷி மற்றும் பிரியங்கா இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கி வந்தனர். கதாநாயகி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியிட்ட போட்டியாளர்களுக்கு விஜய் டிவி நட்சத்திரங்களும் சப்போர்ட் செய்தனர்.
ஒவ்வொரு வாரமும் கடுமையான போட்டி நடந்து வந்த நிலையில், கடந்த வாரம் செமி பைனல் சுற்று நடைபெற்றுள்ளது. இதிலிருந்து சிலர் நேரடியாக பைனல் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
டைட்டில் வின்னர்
இந்நிலையில் பைனலில் வெற்றிபெற்ற கதாநாயகி பெயர் வெளியாகியுள்ளது. இரட்டை சகோதரிகளான ரூபினா மற்றும் ருபிசினா தான் கதாநாயகி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என கூறப்படுகிறது.
இந்த தகவல் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
