லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் பீஸ் கைதி படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
லோகேஷ் கனகராஜ்
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அன்று துவங்கிய இவருடைய வெற்றி பயணம் இன்று லியோ வரை வந்துள்ளது.
இதற்கு இடையில் கைதி, மாஸ்டர், விக்ரம் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கும் என கூறப்படுகிறது.
கைதியின் வசூல்
இதுவரை லோகேஷ் இயக்கியுள்ள ஐந்து திரைப்படங்களில் அவருடைய மாஸ்டர் பீஸ் திரைப்படம் என ரசிகர்களால் கருதப்படுவது கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த கைதி தான்.
இப்படம் வெளிவந்து நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், கைதியின் முழு வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ. 102 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.