விரைவில் கைதி 2-ம் பாக படப்பிடிப்பில் கார்த்தி..கசிந்த தகவல்!
கடந்த 2019-ம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி நடிகர் கார்த்தி நடித்து வெளியான கைதி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.
பல்வேறு மொழிகளிலும் ரீமேக் ஆகியிருந்தது, ஜப்பானிலும் படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.
கைதி முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கைதி 2-ம் பாகம் எடுக்கவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்திருந்தார்கள்.
அப்பொழுது அது குறித்து பேசிய இயக்குனர் லோகேஷ் கைதி முதல் பாகம் எடுக்கும்போதே 2-ம் பாகத்திற்க்கான காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது என்றும் இன்னும் 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது என்றும் தெரிவித்து இருந்தார்.
தற்போது லோகேஷ் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். மேலும் கார்த்தி விருமன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படங்களை இருவரும் முடித்துவிட்டு அதன் பிறகு கைதி இரண்டாம் பாகத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.