தனது மகனுடன் விளம்பரத்தில் நடித்துள்ள நடிகை காஜல் அகர்வால், ஆனால்?- ஏன் இப்படி, கேள்வி கேட்கும் ரசிகர்கள்
காஜல் அகர்வால்
ஹிந்தி சினிமாவில் க்யூன் ஹோ கயானா எனும் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பின் தெலுங்கில் 2007ம் ஆண்டு வெளியான லக்ஷ்மி கல்யாணம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால்.
தமிழ் சினிமா பக்கம் பரத் நடிக்க பழநி படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தவர் அடுத்தடுத்து விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், அஜித்திடன் விவேகம், கார்த்தி, சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மக்களின் பேராதரவை பெற்று வந்தார்.
முதல் விளம்பரம்
2020ம் ஆண்டு கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்ட காஜல் அகர்வாலுக்கு நீல் என்ற மகன் உள்ளார்.
அண்மையில் காஜல் அகர்வால் தனது மகன் நீலுடன் இணைந்து First Cry விளம்பரத்தில் நடித்துள்ளார், இந்த நிறுவனத்தின் சம்மர் ஆஃபர்களை விளம்பரப்படுத்தியுள்ளார்.
ஆனால் மகனின் புகைப்படங்களை பலமுறை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நடிகை காஜல் அகர்வால் விளம்பரத்தில் தனது மகனின் முகத்தை மறைத்துள்ளார்.
இதுகுறித்து தான் ரசிகர்கள் ஏன் என அதிகம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.