இன்று தனது 39வது பிறந்தநாள் கொண்டாடும் காஜல் அகர்வால்.. பட சம்பளமும், சொத்து மதிப்பும், முழு விவரம்
காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால், தென்னிந்திய சினிமாவில் முக்கிய நாயகியாக வலம் வந்தவர்.
கடந்த 2004ம் ஆண்டு வெளியான இந்தி படமான கியூன் ஹோ கயா நா என்ற இந்தி படத்தில் நடிக்க தொடங்கியவர் தமிழ் பக்கம் பழனி, பொம்மலாட்டம் படங்கள் மூலம் கவனம் பெற்றார்.

அட 80களின் டாப் நாயகி நடிகை ராதாவின் திருமண போட்டோவை பார்த்துள்ளீர்களா... அப்போது எப்படி உள்ளார் பாருங்க
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான மாவீரன் படத்தில் ராம் சரண் ஜோடியாக நடித்திருந்தார், அப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக அதன்மூலம் ரசிகர்களிடம் ரீச் பெற்றார் காஜல் அகர்வால்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் இப்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
திருமணம், சொத்து மதிப்பு
சினிமாவில் பீக்கில் இருந்தபோதே கடந்த 2020ம் ஆண்டு கௌதம் கீட்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
ஒரு படத்திற்கு ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கும் காஜல் அகர்வால், விளம்பரங்களில் நடிக்க ரூ. 1 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.
இப்படி படம், விளம்பரம், சொந்த தொழில் மூலம் சம்பாதிக்கும் நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு ரூ. 85 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
