தொடர்ந்து ஒப்பந்தமான படங்களில் இருந்து விலகி வரும் நடிகை காஜல்! என்ன காரணம் தெரியுமா?
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால், இவருக்கு கடந்த ஆண்டு கவுதம் கிச்சலு என்பவருடன் திருமணம் நடந்தது.
மேலும் கடந்த சில நாட்களாக காஜல் கர்பமாக இருப்பதாக செய்தி பரவி வந்தது, காஜலும் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் காஜல் நடிக்க வந்த தி கோஸ்ட் என்ற திரைப்படத்தில் தற்போது அவருக்கு பதிலாக வேறுவொரு நடிகை நடித்து வருகிறார். படக்குழுவினருக்கு காஜலுக்கு இடையே பரஸ்பர முடிவுடன் அவர் அப்படத்திலிருந்து விலகியுள்ளாராம்.
நடிகை ஹன்சிகா நடிப்பில் ரவுடி பேபி என்ற திரைப்படம் உருவாகவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்ததே நடிகை காஜல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.